வாக்காளர் சிறப்பு முகாம் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன
11/24/2020 3:11:55 AM
ஈரோடு, நவ. 24: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக 2 நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் தொடர்பாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தது. மொத்தம் 2,215 வாக்குசாவடிகளில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்களில் 2,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது தவிர ஆன்லைன் மூலமாக 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சேர்த்து மொத்தம் இதுவரை 2,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!