கோர்ட்டில் ஆஜராகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கொள்ளையன் கைது
11/24/2020 1:52:09 AM
திண்டிவனம், நவ. 24: திண்டிவனத்தை சேர்ந்த ஜானி பாஷா(58), என்பவர் கடந்த 2004ல் 2 லட்சத்து 5ஆயிரம் ரூபாயை செஞ்சி சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, புதுப்பாளையம் முத்தூர் அடுத்த வீரமாத்தி தோட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில் என்கின்ற சின்னசாமி(47), மேம்பாலம் அருகே ஜானி பாஷாவை வழிமறித்து பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஜானி பாஷா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளிவந்த செந்தில் நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாவட்டத்தில் இருந்த செந்திலை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதிலும் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!