புதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று
11/24/2020 1:51:25 AM
புதுச்சேரி, நவ. 24: புதுவையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 27 பேருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் 2,305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-25, காரைக்கால்-1, மாகே-1 என மொத்தம் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 36,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 217 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடுகளில் 310 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 527 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 57 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,582 ஆக (96.91 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதுவரை 3,84,417 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 3,43,301 பரிசோதனைகள் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது முதல்வர் நாராயணசாமி பெருமிதம்
தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்’
எஸ்சி, எஸ்டி மாணவர்களை போல் எம்பிசி, ஓபிசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம்
புதுச்சேரியில் புதிதாக 34 பேருக்கு கொரோனா
என்எல்சியில் அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு போராட்டம்
போக்சோவில் வாலிபர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்