சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை உரிமைகளை பாதிக்கும் கைதுக்கு ஆளானால் இலவச சட்ட உதவி பெறலாம்
11/23/2020 2:55:08 AM
வேலூர், நவ.23: வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகளை வரையறுத்துள்ளது. அதன்படி குற்றம்சாட்டப்பட்டவர் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படும் போதும், கைது செய்யப்படும்போதும், அவர்களின் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்திலும், குற்றவியல் நடைமுறை சட்டத்திலும் விளக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மேற்படி உரிமைகள் நடைமுறையில் செயல்படுத்தாத நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் இலவச சட்ட உதவி வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்படுபவரும், கைது செய்யப்படுபவரும், கைது செய்யும் முன் காவல் அதிகாரி ஏன் தங்களை விசாரிக்க அழைக்கிறார் என்பதையும், எந்த குற்றத்தை செய்துள்ளதாக காவல் அதிகாரி நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அதேபோல் தங்களை குற்றத்தில் சிக்க வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கும் உரிமையும் உள்ளது. காவல் அதிகாரி தங்களை விசாரிக்கும்போது, உடன் ஒரு வழக்கறிஞரை வைத்து கொள்ளும் உரிமையும் உள்ளது. அதேபோல் காயம் அல்லது நோய் பாதிப்பிருந்தால் மருத்துவ உதவி பெறும் உரிமையும் உண்டு. அதேபோல் கைது செய்யப்பட்டவருக்கும் வழக்கறிஞர் உதவி, கைது வாரண்ட் தயார் செய்யப்பட்டு அதனை நடுவர் சரிபார்க்கும் உரிமை, கைது செய்வதற்கான காரணம், பிணை பெறும் உரிமை, கைது செய்யப்பட்டவரை சார்ந்தவர்கள் எவருக்கும் அவரது கைது மற்றும் அவரை காவலில் வைத்துள்ள இடம் ஆகியவை குறித்து தகவல் அளிக்கும் உரிமை உள்ளது.
மேலும், கைது செய்த உடனே மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற உரிமை, தன்னையே குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவதை தடுக்கும் உரிமை, 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உரிமை என அனைத்து உரிமைகளும் உள்ளது. எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இலவச சட்ட உதவி பெற வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அந்தந்த வட்ட நீதிமன்ற வளாகங்களில் இயங்கி வரும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவையோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
எருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்
தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்
தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
வேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!