ஓசூரில் மாறி வரும் சீேதாஷ்ணம் குளிர்கால நோய் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை
11/23/2020 2:48:37 AM
ஓசூர், நவ.23:ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் தாக்கி உற்பத்தி குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினம் உள்ளிட்ட விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஓசூர் பகுதிகளில் தற்போது சீதோஷ்ணநிலை மாறி, கடும் குளிர் நிலவி வருவதால், ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் தாக்கி வருகின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் முக்கிய நோயான டௌனி நோய், ரோஜா மலர்களை தாக்கி வருவதால் செடிகளில் அதன் இலைகள் கருகி விழுகின்றன. தொடர்ந்து பூக்களும் கருகி தரத்தை இழக்கின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த, பல்வேறு ரசாயன மருந்துகளை தெளித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியாததால், மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டெளனிநோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!