காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்
11/23/2020 2:48:22 AM
கிருஷ்ணகிரி, நவ.23: கிருஷ்ணகிரியில், மாவட்ட காவல்துறை சார்பில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஏடிஎஸ்பி ராஜூ தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 137 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பந்தப்பட்ட போலீசார் உடன் வந்திருந்தனர். இம்முகாமில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து நேற்று முன்தினம் வரை 171 வழக்குகளில், 183 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி போலீசாருக்கு கிடைத்த புகைப்படங்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் புகைப்படங்கள் வீடியோவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2016ம் ஆண்டு அஞ்செட்டியைச் சேர்ந்த நாகா(24) என்பவர் தனது 3 பெண் குழந்தையுடன் காணாமல் போனார்.
நேற்று நடந்த முகாம் மூலம், அவர் கோவை அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்காவது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல், சூளகிரி அடுத்த புன்னாகரம் கிராமத்தை சேர்ந்த தீபா(19) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி காணாமல் போனார். அவர் தற்போது அசாமில் தனது காதலனுடன் வாழ்ந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று நடந்து முகாமில், 16 வழக்குகளில் 19 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
மண்டல அளவிலான தபால்துறை குறைதீர் நாள் கூட்டம்
வியாபாரியிடம் ₹1.90 லட்சம்
மகளுடன் இளம்பெண் கடத்தல்
ஓசூரில் வாலிபர் எரித்து கொலை மாயமானோர் பட்டியல் எடுத்து தீவிர விசாரணை
முருகன் கோயிலில் கிராம மக்கள் பூஜை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்