புயல் எச்சரிக்கையை தொடர்ந்து
11/23/2020 2:33:51 AM
தஞ்சை, நவ. 23: புயல் எச்சரிக்கை தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் பயிர்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஜஸ்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் 24, 25ம் தேதிகளில் பலத்தக் காற்றுடன் மிக அதிகஅளவு மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி, வயலில் தேங்கியுள்ள நீரை வடித்து விட வேண்டும். இதர பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்.வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிக நீர் வடிந்திடும் வகையில் கிடங்கு வெட்டி வைக்க வேண்டும்.
தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மரங்களில் உள்ள முதிர்ந்த காய்களைப் பறித்து விட வேண்டும். மரத்தில் அதிக அளவு இளநீர் குலைகள் இருந்தால், இளநீர் குலைகளையும் பறித்து, மரத்தை அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னை மரங்களில் உள்ள காய்ந்த மட்டைகள் மற்றும் பாலையை அகற்றி விட வேண்டும். அதிக அளவில் உள்ள பச்சை மட்டைகளையும் கழித்து விட வேண்டும். பழ மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் இதர மரங்களில் அதிக அளவில் உள்ள கிளைகளை வெட்டி காற்று எளிதில் புகும் வண்ணம் கழித்து விட வேண்டும். விவசாயிகள் இரு நாள்களில் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்