பொன்னமராவதி: விசைத்தறிகளை இயக்க கோரிக்கை
11/23/2020 2:27:28 AM
பொன்னமராவதி, நவ.23: பொன்னமராவதி விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வந்தனர். ஒரு சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் திடீரென விசைத்தறிகள் மூடப்பட்டது. மூடப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால் அங்கு வேலை செய்தவர்கள் படிப்படியாக மாற்றுப்பணிக்கு சென்று விட்டனர். இங்கு இருந்த மிஷின்களை ஏலம் விடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் இந்த கட்டிடம் பாழடைந்து கிடக்கின்றது. பொன்னமராவதி பகுதியில் 100 பேர் வேலை செய்யும் எந்த தொழிற்சாலைகளும் இல்லாத வேலையில் இந்த விசைத்தறியில் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் மூடப்பட்டுள்ளது. இந்த விசைத்தறியினை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர யாரும் முயற்சி செய்யவில்லை. எனவே தமிழக அரசு இந்த விசைத்தறியினை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து 100க்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
உலகத்தரமான அதிநவீன 128-சிலைஸ் சி.டி.ஸ்கேன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
3 பள்ளிகளுக்கு விருது வழங்கல்
புதுகையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில்
இடையாத்தூரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
தீ விபத்தில் வைக்கோல் எரிந்து சாம்பல்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!