தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
11/23/2020 2:08:31 AM
திருப்பூர், நவ. 23: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 7 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என திருப்பூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத்தோட்டம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கி இஸ்லாமியர்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்