எல்.பி.பீ. கொப்பு வாய்க்கால் நீரை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
11/23/2020 1:56:05 AM
ஈரோடு, நவ. 23: கீழ் பவானி வாய்க்கால் (எல்.பி.பீ.) கொப்பு வாய்க்கால் நீரை தடுக்கும் நபர்க்ள மீது வயல்வரப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ஈரோட்டில் கீழ்பவானி முறைநீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன் தலைைம தாங்கினார். செயலாளர் வடிவேலு முன்னிலை வகித்தார். இதில், பெரும்பள்ளம் கசிவு நீர்திட்ட தலைப்பு பகுதியில் கீழ்பவானி பாசன திட்ட அமைப்பின் ஒழுங்கு முறை விதிகளை பொருட்படுத்தாமல் 2,400 ஏக்கர் பாதிக்கும் வகையில் பெருந்துறை தாலுகா திருவாச்சி கிராமத்திலிருந்து பிரதான வாய்க்கால் 56வது மைலை கடந்து நீரை தவறான முறையில் கொண்டு செல்வதை ரத்து செய்யக்கோரி பாசன அமைப்பு சார்பில் இன்று (23ம் தேதி) ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயை 56வது மைலில் கசிவுநீர் கொண்டு செல்ல முன்மொழிவும் அனுமதியும் கோரப்படவில்லை எனவும், அரசின் விதிமுறைகளுக்குப்படாத எந்த திட்டத்திற்கும் துறை மூலம் அனுமதி வழங்கப்படாது எனவும் பதில் தெரிவித்துள்ளதால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கீழ்பவானி பாசன திட்டத்தில் மதகு பகுதிகளில் கீழ்பகுதி நிலங்களுக்கு மேல் பகுதி விவசாயிகள் கொப்புவாய்க்கால் நீரை தடுப்பது போன்ற செயல்களை தடுக்க வயல்வரப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டமைப்பு துணை தலைவர் ராமசாமி ஆறுமுகம், இணை செயலாளர்கள் பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, துளசிமணி, வெங்கடாசலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!