வாக்குச்சாவடி மையங்களில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு
11/23/2020 1:08:19 AM
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே.எல்.கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வந்த சிறப்பு வாக்காளர் முகாமை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கே பணியில் இருந்தவர்களிடம் வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாமில் நடைபெற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து புதிதாக சேர்ந்த வாக்காளர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள் மு.பகலவன், கதிரவன், டாக்டர் பரிமளம், தலைமை பேச்சாளர் தமிழ் சாதிக், பேரூர் நிர்வாகிகள் அறிவழகன், ரமேஷ், மனோகரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள், பாஸ்கரன், சுகு திமுக நிர்வாகிகள் ராகவரெட்டிமேடு ரமேஷ், கருணாகரன், வழக்கறிஞர் அணி நிர்வாகி தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற டிசம்பர் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறக்கூடிய சிறப்பு முகாம்களில் திமுகவினர் விழிப்புடன் இருந்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாமதமாக பணிக்கு வரும் இ சேவை மைய ஊழியர்கள்: பொதுமக்கள் புகார்
ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி அக்கா - தம்பி சாவு
பூந்தமல்லி அருகே பரபரப்பு ‘விடிஞ்சா கல்யாணம்’ வரவேற்புக்கு முன் அழகு நிலையம் சென்ற மணமகள் ‘எஸ்கேப்’: திருமண மண்டபத்தை சூறையாடிய மாப்பிள்ளை வீட்டார்
ரவுடி படுகொலையில் ஒருவர் கைது தலைமறைவான 8 பேருக்கு வலை: நண்பன் கொலைக்கு பழிக்குப்பழி
கொலை வழக்கில் ரவுடிக்கு ஆயுள்: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி: தாய் படுகாயம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்