பரங்கிமலை ராணுவ மையத்தில் 245 இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு: 15 பேர் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள்
11/22/2020 7:24:26 AM
சென்னை, நவ.22: பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது (ஓடிஏ). புதிதாக தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கு இங்கு மலையேற்றம், குதிரையேற்றம், உடற்பயிற்சி, பாராசூட் உள்ளிட்ட கடினமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 181 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 15 பேர் என மொத்தம் 245 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா பரங்கிமலை ஓடிஏ மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதில் மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.சிங் பங்கேற்று ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிறப்பாக செயல்பட வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் ஏ.சி.ஏ.வருண் கணபதிக்கு வழங்கப்பட்டது. மகாதேவ் சிங் ரத்தோருக்கு வெள்ளி பதக்கமும், பாட்டீல் டிராஜ் பதங்கராவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று வழிமுறைகள் காரணமாக பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் செய்திகள்
கம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது
இந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை
பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது
1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்