26ம்தேதி பொது வேலை நிறுத்தம் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம்
11/22/2020 3:24:34 AM
பொன்னமராவதி, நவ.22: மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நவம்பர் 26ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலை விளக்கி மக்கள் சந்திப்பு இயக்கம் பொன்னமராவதியில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் தீன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் அனைத்து போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் ரத்தினவேல் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் ஏஐடியுசி பொறுப்பாளர் ஏனாதி ராசு சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன் ஒய்யம்மாள்,
சிபிஎம் சிங்கம்புணரி தாலுகா குழு உறுப்பினர் சிங்காரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொன்னமராவதி பேருந்து நிலையம் அண்ணா சாலை மற்றும் கடை வீதி முழுவதும் மக்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கி வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு ஆதரவு கோரினர்.
மேலும் செய்திகள்
உலகத்தரமான அதிநவீன 128-சிலைஸ் சி.டி.ஸ்கேன் திருச்சி தென்னூர் காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
3 பள்ளிகளுக்கு விருது வழங்கல்
புதுகையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழில்
இடையாத்தூரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி
தீ விபத்தில் வைக்கோல் எரிந்து சாம்பல்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!