SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன்னமராவதி அருகே 2 பைக்குகள் மோதல்: மேலும் ஒருவர் பலி

11/22/2020 3:24:18 AM

பொன்னமராவதி, நவ.22: பொன்னமராவதி அருகே 2 பைக்குகள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் சிவகங்கை மாவட்டம் பிரான்பட்டிக்கு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். வெள்ளையங்குடிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது பொன்னமராவதியில் இருந்து வெள்ளையங்குடிப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (22) என்பவர் வந்த பைக் நேருக்கு நேர் மோதியது.

இதில் கணேசன் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த வெள்ளையங்குடிப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (22) என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்