பொன்னமராவதி தாலுகாவில் 106 வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
11/22/2020 3:23:47 AM
பொன்னமராவதி, நவ.22: பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 106 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வலம்புரிவடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, அஞ்சுபுளிப்பட்டி, பகவாண்டிப்பட்டி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி காரையூர், மேலத்தானியம், கீழத்தானியம், அரசமலை, தேனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் முகாமினை திருமயம் எம்எல்ஏ ரகுபதி பார்வையிட்டு திமுக பூத் கமிட்டியினரிடம் தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் ஒன்றியச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகர செயலாளர் அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள 66 இடங்களில் 106 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது. இந்தப் பணிகளில் 172 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தாலுகாவில் நடைபெற்று வரும் இந்த முகாமினை தாசில்தார் திருநாவுக்கரசு, தேர்தல் துணை தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
அரிமளம், திருமயம் பகுதியில் நீர்நிலைகள், விவசாய நிலங்களில் உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள் “குடி” மகன்களால் மக்கள், விவசாயிகள் அச்சம்
கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கம் புதுகையில் ஆர்ப்பாட்டம்
தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண் மற்றொருவர் கைது: ஒருவருக்கு வலை
அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்