திருப்பூரில் இன்று நடைபெறும் வேல் யாத்திரையை தடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
11/22/2020 2:03:16 AM
திருப்பூர், நவ. 22: திருப்பூரில், இன்று நடைபெறவுள்ள வேல் யாத்திரையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர், மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவி வரும் காரணத்தால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு நீதிமன்றமும் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜ.வினர் திருத்தணியிலிருந்து திருச்செந்தூர் வரை மேற்கொள்ளவிருக்கும் வேல் யாத்திரைக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக அரசின் ஆணையை சிறிதும் பொருட்படுத்தாமல் வேல் யாத்திரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பற்றி கவலைப்படாமல் பா.ஜ.வினர் ஒன்று கூடி தமிழக அரசின் ஆணையை கேலி கூத்தாக்கி வருகின்றனர். ஓரிடத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இப்படி இவர்கள் குவிவது, பிறகு அரசு தலையிட்டு பா.ஜ. தலைவரின் வேல் யாத்திரையை தடை செய்வதாக அறிவித்து கைது செய்வதும், பிறகு அவர்களை விடுதலை செய்வதும் நாடக பாணியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இது தமிழக அரசு மற்றும் போலீசாரின் நம்பக தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் 22ம் தேதி (இன்று) இந்த நாடக பாணியிலான வேல் யாத்திரை திருப்பூர் வருவதாக அறிகின்றோம். திருப்பூரில் பா.ஜவினர் நடத்தவிருக்கும் இந்த வேல் யாத்திரை மக்களிடயே நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைத்து கலவரத்திற்கு வித்திடும் என பலரும் அஞ்சுகின்றனர். எனவே நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் திருப்பூரில் வேல் யாத்திரை தொடங்கும் முன்பே அவர்கள் ஒன்று கூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்