தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீது குண்டாஸ்
11/22/2020 1:59:56 AM
ஈரோடு, நவ. 22: ஈரோட்டில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு டவுன், மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த மாதம் ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து தெருவை சேர்ந்த ஜானி மகன் பாபு ராஜ் (எ) பாபு (24), வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கண்ணன் (31), லக்காபுரம் சாணார் மேடு மாணிக்கம் மகன் பிரபாகரன் (எ) பூபதி (29) ஆகியோரை
போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது ஈரோடு டவுன் போலீஸ் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்பி. தங்கதுரை, கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார். இதன்பேரில், பாபு, கண்ணன், பிரபாகரன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போலீசார் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், நடப்பாண்டு இதுவரை தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியதாக 11 பேர் என 32 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு எஸ்பி. தங்கதுரை தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பவானி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி
பு.புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந்தது
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் கூரையை சேதப்படுத்திய யானை
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300டன் புழுங்கல் அரிசி
ஈரோடு அரவிந்த் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
இந்து இண்டர்நேஷனல் பள்ளி ஆச்சார்யா கல்விக்குழுமத்துடன் இணைப்பு
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!