எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய வாலிபர் கைது
11/22/2020 1:57:38 AM
நாமக்கல், நவ. 22: நாமக்கல் கேஎம்சி தெருவில் ஆனந்த் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு கடையை உடைத்த மர்ம நபர், ₹2 லட்சத்தை திருடி சென்றான். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கடையில் பணத்தை திருடிய நபர் குறித்த விபரங்கள் போலீசாருக்கு தெரிந்தது. தொடர்ந்து கடையில் திருடிய தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த மலைராஜ் மகன் செல்வகுமார்(26) என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
மது விற்ற வாலிபர் கைது
ஸ்டூடியோவில் கேமரா திருட்டு
மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை
திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!