கடலூரில் காரில் கடத்தப்பட்ட டிரைவர் ஆந்திராவில் கொலை
11/22/2020 1:53:21 AM
கடலூர், நவ. 22: கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த கார் டிரைவர் கடந்த 16ம் தேதி காரில் 5 ேபர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். அவர் ஆந்திராவில் கொலை ெசய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவரது மகன் வினோத்குமார்(24). இவர் சென்னையில் தனியார் கார் டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வினோத்குமார் கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 16ம் தேதி சென்னையில் இருந்து ஒரு கும்பல் காரில் வினோத்குமார் வீட்டிற்கு வந்தனர். பின்னர் வினோத்குமாரை அவர்கள் கட்டாயப்படுத்தி காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இது குறித்து வினோத்குமாரின் தந்தை அருள்மொழி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றதாக 16ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதி போலீசார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் ஆந்திரா கடப்பா பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் வினோத்குமார் என்பதும் தெரிய வந்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரில் வந்து பார்வையிட்டு இறந்தது வினோத்குமார் தானா என உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார், வினோத்குமார் பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தைக் குறித்து கூறி, அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள வாலிபர் வினோத்குமார்தான் என்பதை உறுதி செய்ய ஆந்திரா போலீசாருடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!