முதல் நாளில் 6,506 பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த சிறப்பு முகாம்
11/22/2020 1:45:31 AM
வேலூர், நவ.22: வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த சிறப்பு முகாமில் முதல் நாளான நேற்று 6506 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இச்சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6 காட்பாடி தொகுதியில் 1,183 படிவங்களும், வேலூர் தொகுதியில் 1,272 படிவங்களும், அணைக்கட்டு தொகுதியில் 1,151 படிவங்களும், கே.வி.குப்பம் தனித்தொகுதியில் 754 படிவங்களும், குடியாத்தம் தனித்தொகுதியில் 1,188 படிவங்களும் பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கான படிவம் 7 காட்பாடி தொகுதியில் 25 படிவங்களும், வேலூர் தொகுதியில் 19 படிவங்களும், அணைக்கட்டு தொகுதியில் 41 படிவங்களும், கே.வி.குப்பம் தனித்தொகுதியில் 9 படிவங்களும், குடியாத்தம் தனித்தொகுதியில் 22 படிவங்களும் பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான படிவம் 8 காட்பாடி தொகுதியில் 126 படிவங்களும், வேலூர் தொகுதியில் 142 படிவங்களும், அணைக்கட்டு தொகுதியில் 80 படிவங்களும், கே.வி.குப்பம் தனித்தொகுதியில் 82 படிவங்களும், குடியாத்தம் தனித்தொகுதியில் 148 படிவங்களும் பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் விவரங்களை திருத்துவதற்கான 8ஏ படிவம் காட்பாடி தொகுதியில் 50 படிவங்களும், வேலூர் தொகுதியில் 113 படிவங்களும், அணைக்கட்டு தொகுதியில் 35 படிவங்களும், கே.வி.குப்பம் தனித்தொகுதியில் 24 படிவங்களும், குடியாத்தம் தனித்தொகுதியில் 42 படிவங்களும் பெறப்பட்டன. மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் நாளான நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என மொத்தம் 6,506 படிவங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
போலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்
திமுக அரசு அமைந்தால்தான் மக்களுக்கு பாதுகாப்பு வேலூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி: மத்திய அரசின் எடுபிடி அதிமுகவை அகற்ற வேண்டும்
பள்ளி சாரா கல்வி இயக்ககம் சுற்றறிக்கை கற்போர் மையங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து
குற்றவாளிகளை பிடிக்க உதவிய மோப்ப நாய் ‘சன்னி’ உயிரிழப்பு கொலை, கொள்ளை வழக்குகளில்
நெற்பயிரை தாக்கும் வெட்டுப்புழு தடுக்கும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்
விசிக ஆர்பாட்டம் வேளாண் சட்டத்தை கண்டித்து
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்