SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் சாலைமறியல்

11/21/2020 7:33:58 AM

தேனி, நவ. 21: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது போலீசார் அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். இவரது கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி தேனி நேரு சிலை அருகே நடந்த போராட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இதில் எம்எல்ஏ சரவணக்குமார், நகர பொறுப்பாளர் பாலமுருகன்,  ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன், வக்கீல்கள் செல்வம், ராஜசேகர், செல்வகுமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜீவா,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், முன்னாள் நகர பொறுப்பாளர் முருகேசன்,  மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ரவி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் டிஎஸ்பி முத்துராஜ் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார். இந்த போராட்டத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்