கம்பத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு நகை திருடியவரை அரைமணி நேரத்தில் பிடித்த போலீசார்
11/21/2020 7:33:41 AM
கம்பம், நவ. 21: உத்தமபாளையம் யாதவர் தெருவை சேர்ந்த சோணை முருகன் மனைவி ஆனந்தி (35). முத்துலாபுத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கம்பம் வடக்கு காவல்நிலையம் அருகேயுள்ள மண்டபத்தில் உறவினர் திருமணத்திற்கு வந்தார். மண்டபம் அருகே வந்த போது மர்மநபர் ஒருவர் திடீரென ஆனந்தி கழுத்திலிருந்த ரூ.40 மதிப்புள்ள தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தி உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி, எஸ்ஐ திவான் மைதீன் உள்ளிட்ட போலீசார் விரைந்து செயல்பட்டு நகை திருடிய மர்மநபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கம்பம்- கோம்பை ரோடு ஆர்ஆர் நகரை சேர்ந்த விவேக் (30) என்பதும், இவர் மீது ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரிந்தது. திருட்டு சம்பவம் நடந்த அரை மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்