திருப்பூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சிறப்பான வரவேற்பு
11/21/2020 7:27:53 AM
திருப்பூர், நவ.21: திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை அவர் திருப்பூர் வந்தார். அவருக்கு திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.சார்பில், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் அங்கிருந்து புறப்பட்டு காங்கயம் ரோடு, காயத்ரி மஹால் சென்றார். அங்கு திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று, சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், அமைப்பு செயலாளர்கள் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிவசாமி, அவைத் தலைவர் பழனிசாமி, மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், கருவம்பாளையம் பகுதி செயலாளர் கருவம்பாளையம் மணி, திருப்பூர் மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சடையப்பன், வர்த்தக அணி செயலாளர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் உஷா ரவிக்குமார், ஜெயலலிதா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வர்த்தக அணியின் ஜீவானந்தம், பாசறை துணை செயலாளர் சாஜகான், முன்னாள் கவுன்சிலரும், 29வது வட்ட கழக செயலாளருமான கனகராஜ், நீதிராஜன், ஹரிகரசுதன், முன்னாள் நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் கேபிள் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
மத்திய அரசின் புதிய திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச மருத்துவ முகாம், ரத்ததானம்-கண்தானம்
மக்களை அரவணைத்து செல்பவராக நாட்டின் தலைவர் இருக்க வேண்டும்
புகையிலை விற்ற 3 பேர் கைது
10 மையங்களில் இன்று தேசிய திறனாய்வு தேர்வு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்