தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
11/21/2020 12:30:37 AM
ஆத்தூர், நவ.21:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி தேசிய நெடுங்சாலை, தனியார் பள்ளி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் முகத்தை மூடியபடி சென்ற வாலிபர், விளக்கை அணைத்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த அலாரம் ஒலிக்க துவங்கியது. இதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலின் பேரில், விரைந்து வந்த வங்கி மேலாளர் வெங்கடகிரி, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மற்றும் அதன் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில், கொ ள்ளையில் ஈடுபட்டது சார்வாய் கிராமத்தை சேர்ந்த விஜய் (30) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அறிவிக்கப்படாத மின்வெட்டு
ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு
வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!