கெரிகேப்பள்ளி அரசு பள்ளிக்கு ₹56 ஆயிரம் மதிப்பில் இலவச பெஞ்ச், டெஸ்க்
11/21/2020 12:29:45 AM
கிருஷ்ணகிரி, நவ.21:மத்தூர் ஒன்றியம், கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க போதுமான பெஞ்ச், டெஸ்க் இல்லை. இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுத்த கோரிக்கையை ஏற்ற ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ், ₹56 ஆயிரம் மதிப்பில் பெஞ்ச் மற்றும் டெஸ்க்கை நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பள்ளி தலைமை ஆசிரியரின் முயற்சியால், கடந்த ஆண்டு 68 மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது 131 ஆக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை பாராட்டும் வகையில் இந்த பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டுள்ளது,’ என்றார். தலைமை ஆசிரியர் வீரமணி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
சேலம் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம்
அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம்
மயான பாதையை சீரமைத்த ஊர்மக்கள்
அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
உம்மியம்பட்டி அரசு பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப சாதனம்
பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!