SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்; போலீசார் கைது செய்தனர்

11/21/2020 12:29:28 AM

தேன்கனிக்கோட்டை, நவ.21:திருக்குவளையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தேன்கனிக்கோட்டை பஸ் நிலைய நுழைவு வாயிலில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ தலைமையில், தளி ஒன்றிய சேர்மன் சீனிவாசலுரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் திவாகர், கணேசன், நாகன், பேரூர் செயலாளர் சீனிவாசன் மற்றும் சீனிவாசன், சின்னராஜ், நாகராஜ், கிரிஸ், அனுராதாசீனிவாசன், சக்திவேல், கிருஷ்ணன், முஜாமில்பாஷா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திமுகவினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். ன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் சரவணன், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர், அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் நவாப், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லம், திருமலை செல்வன், ஆறுமுகம், வேல்மணி, தினேஷ், சவுந்தரராஜன், வெங்கட்ராமன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட செங்குட்டுவன் எம்எல்ஏ உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில், நான்கு ரோடு சந்திப்பில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட திமுக துணை செயலாளர் தட்ரள்ளி நாகராஜ், விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், மாநில துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தம்பிதுரை, கௌதம், சங்கர், அருள், நேதாஜி, இளையராஜா, ராஜன், முர்த்தி, செந்தில்நாயகம், அர்ச்சுணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரூர் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.
ஓசூர்:ஓசூர் பஸ் நிலையத்தில் சத்யா எம்எல்ஏ தலைமையில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், நகர துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை டவுன் போலீசார் கைது செய்தனர்.ஊத்தங்கரை: ஊத்தங்கரை நான்குமுனை அண்ணா சிலை சந்திப்பு அருகில், ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், நகர செயலாளர் பாபு சிவகுமார் உள்ளிட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஊத்தங்கரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பாம்பாறு அணையில் மாரம்பட்டி பிரிவு ரோட்டில், ஊத்தங்கரை ஒன்றிய குழு உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவருமான குமரேசன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூளகிரி:சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத் உள்ளிட்ட திமுகவினர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சூளகிரி போலீசார் கைது செய்தனர்.வேப்பனஹள்ளி:வேப்பனஹள்ளியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், மாதையன், முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் கலீல், நரசிம்மன் மற்றும் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் பாபு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்