தொழிலாளி வீட்டில் ₹16 ஆயிரம் திருட்டு
11/21/2020 12:29:20 AM
பாப்பாரப்பட்டி, நவ.21: பாப்பாரப்பட்டி அடுத்த வள்ளூர் கிராமத்தை சேர்த்தவர் கண்ணன்(35). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி குமுதா(30). ஊருக்கு வெளியே உள்ள நிலத்தில் வீடுகட்டி வசித்து வந்தனர். குமுதா, கைக்குழந்தையுடன் அருகில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார். இதனால் கண்ணன் வேலை செய்யும் இடத்திலேயே தங்கி, வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த ₹16 ஆயிரத்தை திருடிச்சென்றனர். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து, தாய் வீட்டில் இருந்த குமுதாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நோய், நொடியிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு வழிபாடு
பொறுப்பேற்பு
மக்கள் சபை கூட்டம்
தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்
கிழக்கு-மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்