வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்
11/21/2020 12:29:06 AM
தர்மபுரி, நவ.21: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலின்போது, போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் உண்மையான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை முறியடிக்கும் வகையில், திமுக வாக்குச்சாவடி முகவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இன்று (21ம்தேதி) மற்றும் நாளை (22ம்தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி உண்மையான வாக்காளர்களை சேர்த்தும், போலியான வாக்காளர்களை நீக்கியும், மாவட்ட திமுகவால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட்டு, அந்த விவரங்களை மாவட்ட திமுகவிற்கு தெரிவிக்குமாறு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சேலம் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம்
அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம்
மயான பாதையை சீரமைத்த ஊர்மக்கள்
அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
உம்மியம்பட்டி அரசு பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப சாதனம்
பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!