கபடியில் முன்விரோதம் வாலிபர் மீது தாக்குதல்
11/20/2020 1:50:42 AM
போடி, நவ.20: போடி அருகே கபடி விளையாட்டில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முனீஸ்குமார்(22). இதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் வெற்றி(22). இருவருக்கும் கபடி விளையாட்டில் முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தில் வெற்றி, இவரது சகோதரர் தினேஷ்(18), முருகன் மகன் லிங்கேஷ்(20), மது மகன் தனுஷ் மற்றும் ஆதித்யா ஆகியோர் சேர்ந்து முனீஸ்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது பெற்றோரையும் கம்பு, கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இதில் முனீஸ்குமாருக்கும் அவரது தாயாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து முனீஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றி, தினேஷ், லிங்கேஷ் ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல் லிங்கேஷ் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் முனீஸ்குமார் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!