1 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் கைது
11/20/2020 1:50:22 AM
கம்பம், நவ.20: கம்பத்தில் பெண் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கம்பம் உலகத்தேவர் தெரு பத்திரகாளியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் செல்லக்காளி(60). இவரது வீட்டிலிருந்து கடந்த மே 21ம் தேதி 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்து வந்த ஜெயக்குமார்(28), வண்ணகிளி(48) ஆகியோரை தேடி வந்தனர். நேற்று கம்பம் உலகத்தேவர் தெருவில் இன்ஸ்பெக்டர் சிலைமணி ,சப்.இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது தலைமறைவாக இருந்த வண்ணகிளி என்பவர் குருங்குமாயன் தெருவைச் சேர்ந்த ராஜாத்தி(44) உடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வண்ணக்கிளி மற்றும் ராசாத்தியை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்