SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துரைச்சாமிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் டிகேஎஸ் இளங்கோவன் எம்பி திறந்து வைத்தார்

11/12/2020 5:25:43 AM

கடையநல்லூர், நவ.12:  கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி துரைச்சாமிபுரம் இந்து நாடார் துவக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவுபெற்றதையடுத்து மாநில திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் டாக்டர் செல்லத்துரை வரவேற்றார். புதிய வகுப்பறை கட்டிடத்தை  மாநில செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. திறந்து வைத்து பேசியதாவது:

 ஒன்றிய செயலாளர் செல்லத்துரை பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியதால் நான் உடனடியாக ஒப்புக்கொண்டு ரூ.20 லட்சம் நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்தேன். கல்வி மிக முக்கியம். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் கல்விக்கு புகழ்பெற்றது என்றாலும் ஒரு காலத்தில் மாநில அரசிடமிருந்த அந்த கல்வித்துறை பொது பணிக்கு போனபிறகு, 1974 வரை கல்லூரி கல்வி வரை இலவச கல்வி என வழங்கி கொண்டிருந்தது தலைவர் கருணாநிதி ஆட்சி காலம். பிறகு கல்வி பொதுப்பணிக்கு போன பிறகு உங்களுக்கே தெரியும். இந்த கல்வி என்பது மிக விலை உயர்ந்த பொருளாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வேண்டிய சூழலாகவும் மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

 நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, மாநில விவசாய அணி அப்துல்காதர், ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், சீனித்துரை, பொதுக்குழு ராசையா, தென்காசி நகர செயலாளர் சாதிர், ஜெகதீசன், ஷேக்பரீத், அப்துல் கனி, பால்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம்,  ஊராட்சி செயலாளர்கள் சி.எம்.குமார், வேலு, துரை, சுப்பிரமணியன், மணிகண்டன், குட்டி என்ற சீதாராமன், திருமலைக்கனி, திருமலைசாமி, விசுவநாதன் மணி, முத்துக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் பூரணச்சந்திரன், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் துரைக்கனி, பன்னீர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இன்பராஜ்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், பாண்டி, கண்ணன், பகவதி, குத்தாலிங்கம், பண்டாரசாமி, தோப்பையா, பேச்சியப்பன், மூக்கையா, கருப்பண்ணன், ஜார்ஜ் குட்டி, மன்மத ராஜா, முத்துராஜ், சமுத்திரகனி, பூவையா, முருகேசன், பாலாஜி, சந்திரன், தங்கம், செல்லப்பா, மகேஷ், பாண்டியன், முருகன், ஜெயபால், ஜெயசீலன், சுரேஷ், கருப்பசாமி, காசிநாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்