2 வீடுகளை உடைத்து நகை, கொள்ளை
11/12/2020 4:29:23 AM
ஆவடி: ஆவடி, வசந்தம் நகர், கங்கை தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் (53). மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6ந்தேதி ஜோதிமுருகன் மகன் திருமணத்திற்காக சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சென்றார். பின்னர், அவர் அங்கிருந்து நேற்று மீண்டும் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
மேலும், ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், முல்லை தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (36). மெக்கானிக். இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கடந்த 7ந்தேதி செல்வராஜ் குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலூருக்கு சென்றார். பின்னர், நேற்று காலை குடும்பத்துடன் திரும்பினார். அப்போது அவரது வீடு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் புகாரின் அடிப்படையில் ஆவடி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!