கடலூர் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கொரோனா
11/11/2020 7:41:14 AM
கடலூர், நவ. 11: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 609 ஆனது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. நேற்று 32 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,609 ஆனது. நேற்று 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 23ஆயிரத்து 100 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 188 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 48 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 45 ஆயிரத்து 641 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 18 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 24 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 456 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக விருத்தாசலத்தை சேர்ந்த 58 வயது பெண் இறந்த நிலையில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 273 ஆனது.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!