தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம்
11/11/2020 7:35:58 AM
தர்மபுரி, நவ.11: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தர்மபுரி நகருக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜவுளி, நகை, பாத்திரங்கள், ஸ்வீட் மற்றும் பலகாரங்கள் வாங்க தர்மபுரி நகருக்கு வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு மற்றும் சின்னசாமி தெருக்களில் இருசக்கர வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டு, அந்த தெருக்களில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி நகருக்குள் பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை, சேலம் ரோட்டில் உள்ள வள்ளலார் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை தர்மபுரி டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது போக்குவரத்து எஸ்ஐ சின்னசாமி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.
மேலும் செய்திகள்
சேலம் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம்
அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம்
மயான பாதையை சீரமைத்த ஊர்மக்கள்
அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
உம்மியம்பட்டி அரசு பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப சாதனம்
பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!