மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா
11/11/2020 7:35:41 AM
தர்மபுரி, நவ.11: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அரூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஓய்வு பெற்ற காவலர், கடத்தூர் மேட்டுக்கொட்டாய் பகுதியில் 58 வயது கூலிதொழிலாளி, கம்பைநல்லூரில் 34 வயது பெண், ஒட்டப்பட்டியில் 49 வயது ஆண் உள்ளிட்ட 13 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5800பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 5542பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டுமு் 14 பேர் குணமடைந்து நோயில் இருந்து மீண்டுள்ளனர். ஆகமொத்தம் 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 50 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும் செய்திகள்
சேலம் மெயின்ரோட்டில் சாலை விரிவாக்க பணி தீவிரம்
அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம்
மயான பாதையை சீரமைத்த ஊர்மக்கள்
அரூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
உம்மியம்பட்டி அரசு பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப சாதனம்
பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!