கொரோனா ஊராடங்கில் தளர்வு 7 மாதத்துக்கு பின்பு சந்தை கூடியது
11/11/2020 7:33:30 AM
சேந்தமங்கலம், நவ.11: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை விற்கவும்- வாங்கவும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவார்கள். சந்தை தொழிலாளர்கள், வாகன ஒட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வழங்கும் இடமாக சந்தை விளங்கியது. 2 நாட்கள் நடக்கும் மாட்டுச்சந்தையில் சுமார் ₹3 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் மாட்டுச்சந்தை மூடப்பட்டது.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சந்தையை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலையிழப்பிற்கு ஆளாகினர். வாரந்தோறும் நடைபெறும் ₹3 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை அடுத்து, புதன்சந்தையில் மாட்டுச்சந்தை கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 7 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மாட்டுச்சந்தை கூடியது. பல்வேறு பகுதிகளில் இருந்து 500 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. ஆனால், கேரள மாநிலத்தில் இருந்த மாடுகளை வாங்க குறைந்த அளவிலான வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். இதனால், வியாபாரம் டல் அடித்தது. கறவை மாடு ₹45 ஆயிரத்துக்கும், இறைச்சி மாடு ₹15 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ₹10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
மேலும் செய்திகள்
ஆன்லைன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
மது விற்ற வாலிபர் கைது
ஸ்டூடியோவில் கேமரா திருட்டு
மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை
திமுகவில் இணைந்த அதிமுக பிரமுகர்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!