தொழிற்சங்கத்தினர் இறங்கி வந்த போதிலும் விசைத்தறி தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தை இழுபறி
11/11/2020 7:33:21 AM
பள்ளிபாளையம், நவ.11: பள்ளிபாளையத்தில் நடந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், இன்று மாலை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, சண்முகம், வாத்தியார் பாலசுப்ரமணியம், யோகநாதன், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐடியூ தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அசோகன், மோகன், அசன் உள்ளிடோர் பங்கேற்று பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக இறங்கி வந்தனர். ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் 8.33 சதவீதத்தில் இருந்து சற்று உயர்த்தி போனஸ் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், சங்கத்தின் மற்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்பே முடிவு அறிவிக்கப்படுமென தெரிவித்ததால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, 3ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று(11ம் தேதி) மாலை 7 மணிக்கு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு
பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
தாய், மகள் மாயம்
திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்