அடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
11/11/2020 7:31:37 AM
ஆத்தூர், நவ.11: ஆத்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை குறித்து தகவலறிந்த ஆத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கழிவறை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்திற்கு விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன் தலைமை வகித்தார். போராட்டத்தில் இளையராஜா, சாமுண்டி குமார், ரவி, முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகள்
சேலம் ஜருகுமலையில் தொடரும் அவலம் பழுதடைந்த கட்டிடத்தில் அரசுப்பள்ளி
பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
ஓமலூர் அரசு மருத்துவர்கள் சாதனை
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஆடு மேய்த்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
விசிக பிரமுகர் கைது
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்