தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம்
11/11/2020 4:14:58 AM
திருப்பூர், நவ.11: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மாநகர பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் நவ.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு புத்தாடை வாங்க திருப்பூர் குமரன் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பெரிய கடை வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில், மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் போலீஸ் விதித்த நேர கட்டுபாட்டை மீறி மாநகர பகுதிக்குள் செல்வதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் செல்லும் கனரக வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திருப்பூர் மாநகரில் கொடி அணிவகுப்பு
ஸ்டாலின் விளம்பர பாதகைகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு
மூலப்பொருட்கள் விலை உயர்வு எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்
5 கடைகளில் தொடர் திருட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை
விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்கம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்