மாநகராட்சியை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்
11/11/2020 4:14:35 AM
திருப்பூர், நவ.11: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 15 வரையுள்ள பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், முதலாம் மண்டல அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கோரிக்கைகள் அனைத்தும் மனுவாக மண்டல துணை பொறியாளர் சந்திரசேகரனிடம் அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்