கூட்டுறவு வங்கி இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் அதிகாரியுடன் வாக்குவாதம்
11/10/2020 7:20:38 AM
திட்டக்குடி, நவ. 10: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் அப்பகுதியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கணக்கு வைத்துள்ளனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முன்னறிவிப்பின்றி அருகிலுள்ள ராமநத்தம் பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தொழுதூர் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாக கூறினர். ஆனால் சம்பவ இடத்திற்கு வங்கி அதிகாரிகள் யாரும் வராததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ராமநத்தம் - லட்சுமணாபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திட்டக்குடி போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களையும் மற்றும் வங்கி அதிகாரிகளையும் அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மத்திய கூட்டுறவு வங்கியின் கடலூர் துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறும்போது, இங்கு போதிய பாதுகாப்பு இன்றி இருப்பதால் வங்கியை இடமாற்றம் செய்வதாக கூறினார். இதற்கு கிராம மக்கள் நாங்கள் புதியதாக இப்பகுதியில் இடம் தருகிறோம் என்று தெரிவித்தனர். இது குறித்து உயர் மட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.. இதை ஏற்று அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!