பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்
11/10/2020 7:20:32 AM
புவனகிரி, நவ. 10: பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் கடற்கரை பகுதியில் நேற்று மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்ணங்கோவில் கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மஞ்சள் நிறத்தில் கோபுர கலச வடிவில் கிடந்த பொருளை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த பொருள் பரங்கிப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், அந்த பொருள் கடற்கரை பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் அனல் மின் நிலையத்திற்கு சொந்தமானது என்றும், அனல் மின் நிலையத்தின் பைப் லைன்கள் கடலுக்கு அடியில் செல்வதால் பைப் லைன்கள் இருக்கும் இடம் குறித்து மீனவர்களுக்கு தெரிவிக்கும் போயா என்ற மிதவை கருவி எனவும் தெரிய வந்தது.
இது கடலில் மிதக்கும் போது அறுந்ததால் அலையில் அடித்து கொண்டு வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி, தனியார் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமானதுதானா? என்பதை உறுதி செய்த பிறகு உரிய வழிமுறைகளுடன் தனியார் நிறுவனத்திடம் அந்த பொருள் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!