எருமப்பட்டி வட்டாரத்தில் சின்ன வெங்காயத்தில் அடி அழுகல் நோய்
11/3/2020 6:20:18 AM
சேந்தமங்கலம், நவ.3: எருமப்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயபிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எருமப்பட்டி வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்த 20 முதல் 25 நாட்களுக்குள் அடி அழுகல் அல்லது குமிழ் அழுகல், செருக்களை எனப்படும் பூஞ்சான் நோய் தாக்குதல் அதிகளவில் தென்படும். பருவமழை மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது 40 நாட்களில் முற்றிலும் பயிர்களை சேதமடைய செய்து விடும். இதனை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, வெங்காய பயிர் செய்வதற்கு நல்ல வடிகால் வசதி உள்ள நிலத்தை தேர்வு செய்வதுடன், உயரமான பார்களை அமைத்து விதைகளை உயரமாக நடவு செய்ய வேண்டும். அடி அழுகல் நோய் விதை மூலம் அதிகளவில் பரவுவதால் நோய் தாக்குதல் இல்லாத தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் அல்லது நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு 24 மணி நேரம் உலர் வெட்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால், வட்டார தோட்டக்கலை அலுவலகத்திற்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு
பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
தாய், மகள் மாயம்
திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்