SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

11/3/2020 6:20:10 AM

திருச்செங்கோடு, நவ.3: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, தீர்மானங்களை விளக்கி பேசினார். வரும் 5ம் தேதி நாமக்கல்லுக்கு வருகை தரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை வரவேற்பது, மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள்  மற்றும் ரிக், லாரி, விசைத்தறி, சாயப்பட்டறை போன்ற சங்கங்களின் பிரச்னைகளை, அவர்களிடமிருந்து பெற்று அறிக்கையாக ஒப்படைப்பது, வரும் 12ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பரமத்திவேலூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் சிறப்பான வரவேற்பு கொடுப்பது.

எல்லோரும் நம்முடன் திட்டத்தில், இணைய தளம் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் தொய்வின்றி பணியாற்றுவது, வாக்குச்சாவடி முகவர்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளில் முனைப்புடன் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காலை இழந்த மொழிப்போர் தியாகி மாரிமுத்துவிற்கு, பொற்கிழியை மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ வழங்கினார். இதில் மொழிப்போர் தியாகி பரமானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ், இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கேவல், எலச்சிபாளையம் தங்கவேல், குமரமங்கலம் செல்வராஜ், மல்லை பழனிவேல், கபிலர்மலை சண்முகம், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன் மற்றும் செல்வம், திருமலை, மகாமுனி, மாரப்பன், வக்கீல் கிரிசங்கர், பூங்கோதை செல்லத்துரை, மொளசி ராஜமாணிக்கம், சரவணமுருகன், ராஜபாண்டி ராஜவேல், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-01-2021

  28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்