SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் தலைவர்கள் சிலைக்கு மரியாதை

11/3/2020 6:17:06 AM

தர்மபுரி, நவ.3: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தர்மபுரி மாவட்ட திமுக, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர்களுக்கு, தர்மபுரியில் நேற்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, தர்மபுரியில் உள்ள பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் இருவரும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், மாவட்ட திமுக அலுவலகத்தில், கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவுக்கு, கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், மேற்கு ஒன்றிய செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம், தர்மபுரி ஒன்றிய செயலாளர் கேஎஸ்ஆர் சேட்டு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிசி துரைசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, முனிராஜ், தங்கமணி, சந்திரமோகன், வாசுதேவன், திருமால் செல்வன், பூங்கொடி, தனேந்திரன், சிவன் உள்பட ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்