பென்னாகரம் வந்த மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரனுக்கு வரவேற்பு
11/3/2020 6:16:31 AM
பென்னாகரம், நவ.3: தர்மபுரி மாவட்ட திமுக, நிர்வாக காரணங்களுக்காகவும், கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் 2 ஆக பிரிக்கப்பட்டு, தர்மபுரி மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.என்.பி இன்பசேகரன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி, மணி, காளியப்பன், துரைசாமி, ராஜகுமாரி, மணிவண்ணன் ஆகியோர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, நேற்று மேற்கு மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை புரிந்த மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரனுக்கு, காரிமங்கலம் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பருவதனஅள்ளியில் உள்ள முன்னாள் எம்எல்ஏவும், அவரது தந்தையுமான பி.என்.பெரியண்ணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் காளியப்பன், ஒன்றிய பொருளாளர் மடம் முருகேசன், தன்டாளன், சுரேஷ், பொறுப்புக் குழு உறுப்பினர் பி.கே துரைசாமி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் காளியப்பன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், பூவண்ணன், அன்பழகன், பவுன்ராஜ், யாரப்ஜான், கமலேசன், விஜய்முனுசாமி, வையாபுரி, முனிராஜ், மாதையகவுண்டர், ரமேஷ், முத்துராஜ், சரவணன், செட்டி, முருகன், கோவிந்தராஜ், குமார், ஆசி தனபால் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகளும் ஜானகி அம்மாள், தமிழ் ஆசிரியர் முனியப்பன், மோகனா முனியப்பன், டாக்டர் ராஜசேகர், மணிமேகலை பெருமாள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
5 சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் 12,810 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் பெண் விவசாயி திடீர் தர்ணா
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்