செங்கல்பட்டு அருகே யார் தாதா என்ற போட்டியில் வாலிபர் சரமாரி வெட்டி கொலை: பிரபல ரவுடி கைது; 3 பேருக்கு வலை
11/3/2020 2:35:35 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் தேவபிரகாஷ் (27). மறைமலைநகரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அபி. இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. தேவபிரசாத் பாஸ்ட்புட் கடையின் அருகில் டீக்கடை, ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தேவபிரகாஷ், பாஸ்ட்புட் கடை வாசலில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது, அருகில் உள்ள டீக்கடைக்காரர், தனது கடைக்கு போர்டு வைக்க முயன்றார். இதற்கு ஓட்டல்காரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை பற்றி, அங்கிருந்த தேவபிரகாஷிடம் டீக்கடைக்காரர் கூறினார். அவரும், ஓட்டல்காரரை, தட்டி கேட்டார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்தது. உடனே ஓட்டல்காரர், மலைமேட்டு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி விஜய் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். அதன்பேரில் அவர், தனது கூட்டாளிகளான அரவிந்தன், வெங்கடேசன், வினோத் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு வந்து, தேவபிரகாஷிடம் தகராறு செய்தனர். பின்னர் வினோத் மறைத்து வைத்திருந்த கத்தியை வாங்கிய விஜய், தேவபிரகாஷை சரமாரியாக வெட்டினார். உடனே, அவரது கூட்டாளிகளும் அவரை வெட்டி, பின்னர், பெரிய கல்லை தலையில் போட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே தேவபிரகாஷ் இறந்தார்.
தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து எஸ்பி கண்ணன், வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அதில், விஜய்க்கும், தேவபிரகாஷுக்கும் இடையே ஏற்கனவே யார் தாதா என்ற போட்டி இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கத்தி சண்டையில் முடிந்தது. இதனால் தேவபிரகாஷுடன், விஜய்க்கு முன்விரோதம் ஏற்பட்டது. இதையொட்டி விஜய், தேவபிரகாஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு நடந்த தகராறில் தேவபிரகாஷ் கொலை செய்யப்பட்டார் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தனர். கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையை கடந்தும் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
3வது பாதையில் ரயில் சோதனை ஓட்டம்
மனைவிக்கு சரமாரி கத்தி குத்து: தலைமறைவான கணவனுக்கு வலை
அரசு ஊழியர் ஓய்வு வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஊழல் ஒழிப்பு சங்கம் வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் கலெக்டர்கள் ஆய்வு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!