மத்திய அரசை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
11/1/2020 9:00:25 AM
கும்மிடிப்பூண்டி, நவ.1: மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரை நீக்க கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க கூடாது. தான் தோன்றித்தனமாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை செயல்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வசந்த் பௌத்தா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் டி.மதன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!