பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் கடிதம்
10/30/2020 1:37:57 AM
சேந்தமங்கலம், அக்.30: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவரும், புதுச்சத்திரம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான செங்கோட்டுவேல் காலமானார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செங்கோட்டுவேல் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் இரங்கல் கடிதம் மூலம் தெரிவித்தார். அந்த கடிதத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், புதுச்சத்திரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பாளையத்திற்கு நேரில் சென்று, அவரது அண்ணன் மகன்கள் விஜயகுமார், ரத்தினகுமார் ஆகியோரை சந்தித்து, நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் கௌதம், கதிராநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு
பழையபாளையம் ஏரியில் இரை தேடி குவிந்த கொக்கு, நாரைகள்
திருச்செங்கோட்டில் 450 மூட்டை மஞ்சள் 15 லட்சத்திற்கு ஏலம்
தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
தாய், மகள் மாயம்
திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்