நீர் பனியில் இருந்து பாதுகாக்க காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்லரில் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்
10/30/2020 12:48:09 AM
ஊட்டி, அக். 30: நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், மலை காய்கறிகள் பாதிக்காமல் இருக்க தற்போது ஸ்பிரிங்லர் மூலம் அதிகாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்த நிலையில் தற்போது நீர் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் புல்வெளிகள், மலை காய்கறிகள், தேயிலை செடிகளும் பாதித்து வருகிறது. மாறுபட்ட காலநிலை நிலவுவதால், மலை காய்கறிகள் மற்றும் தேயிலை செடிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மலை காய்கறி செடிகள் நீர் பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூலும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதனால் நீர் பனியில் இருந்து மலை காய்கறிகளை காக்கும் பொருட்டு தற்போது அனைத்து பகுதிகளிலும் காலை நேரங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலானோர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நீர் பனியில் இருந்து பயிர்களை காத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் குறை தீர்க்கும் கூட்டம்
பராமரிப்பு பணிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்
குன்னூரில் சினிமா படப்பிடிப்புகள் துவக்கம்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு
10 பேருக்கு கொரோனா
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்